சிரிக்க …சிந்திக்க …

 

எத்தனை அழகான முத்துக்கள் …

எத்தனை அழகான முத்துக்கள்! ஒவ்வொரு முத்தையும், பெட்டகத்தில் பதித்து, பட்டை தீட்டி, ஒன்றோடு ஒன்று உரசி உடையாமல், இடையிடையே மென்மையான தடுப்புக் கொடுத்து, மேலே ஒரு தடித்த தோலால் பேக்கிங் செய்து, இத்தனை வேலைப்பாடுடன் கூடிய முத்துப் பார்சலை, குரூரமாக இயந்திரத்தில் இட்டு அரைத்து, கரைத்து, வடிகட்டிக் குடிக்காவிட்டால் என்ன… நான் இனிமேல் குடிக்கப் போவதில்லை, மாதுளம் பழம் ஜூசை.
— பாக்கியம் ராமசாமி. in DINAMALAR … Varamalar Sunday

முதல் …

முதல் பாஸ்வேர்டு – அண்டா காகசம்
முதல் ஐ டோனர் – கண்ணப்பர்

முதல் தந்தி மொழி – கண்டேன் சீதையை
முதல் நேரலை – குருக்ஷேத்ர போர்

முதல் டிவிட்டர் – ஆத்திச்சூடி
முதல் மூக்கு ஆபரேஷன் செய்து கொண்டவர் – சூர்ப்பனகை

முதல் ஸ்டெம்செல் டோனர் – பள்ளி கொண்ட பெருமாள் (தொப்புள் கொடியில் பிரம்மா)
முதல் டிரான்ஸ்லேட்டர் – கம்பர்

முதல் ஸ்டெனோ – பிள்ளையார்
முதல் ஸ்போர்ட்ஸ்மென் – சிவன், கிருஷ்ணன்

முதல் தன்னம்பிக்கை தெரபி பெற்றவர்கள் – அபிமன்யூ, பிரகலாதன்.
முதல் டெஸ்ட் ட்யூப் பேபீஸ் – கௌரவர்கள்

முதல் ஷார்ட் டைம் மெமரிலூஸர் – துஷ்யந்தன்
முதல் ப்ளூ கிராஸ் மெம்பர்ஸ் – சிபிச் சக்கரவர்த்தி, மனுநீதிச்சோழன், பேகன்

முதல் ஃபால்லோயர் – லட்சுமணன்
முதல் சியர் கேர்ள்ஸ் – ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா

முதல் Head ட்ரான்ஸ்ப்ளாண்ட் - பிள்ளையார்
முதல் open heart surgery - ஹனுமான்

Source:::UMA MOHANDASS , Dindigal in MANGAIYAR MALAR…TAMIL MONTHLY

பேர் ஆசை ….பேராசை


பத்திரிகைத் துறைக்கு வந்த புதிது… இளம் வயது. நம் பெயரை அச்சில் ஏதேனும் ஒரு படைப்பிலேனும் பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி மனதில் நிறையும். உணர்ந்து பார்த்தவர்களுக்கு அதன் அருமையும் பெருமிதமும் புரியும். வயது 23. அதுவரை பெரிதாக எதுவும் எழுதி அச்சில் வந்துவிடவில்லைதான். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வருடாந்திர தொகுப்புகளில் கவிதைகளும், வானியல், கணிதம் குறித்த கட்டுரைகளும் வந்திருந்தன. ஆனால் இதழ்களில் அப்படி ஏதும் நான் அதுவரை முயற்சி செய்யவில்லை. அப்படியாக இதழியல் துறைக்கு வந்த புதிது என்பதால், எனக்குள்ளும் நம் எழுத்தை அச்சில் பார்க்க மாட்டோமா என்று இருந்தது. வழக்கம்போல் சிறு கவிதைகள் எழுதினேன். இரு வரிகளில் அமைந்த புதுக் குறள் எனும் கவிதை எழுதினேன். அவற்றில் தளை தட்டாமல் குறள் வெண்பாவெல்லாம் அப்படி ஒன்றும் சரியாக அமைந்திருக்கவில்லை என்பது பின்னாளில் புரிந்தது. இருந்தாலும் கருத்தொடு நின்றது. அப்படி ஒரு புதுக்குறள் கவிதையை கணினி அச்சுக் கோர்ப்பவர் அடித்து, மெய்ப்பு திருத்த (புரூஃப் பார்க்க) வைத்திருந்தார். அப்படியாக அச்சில் வந்த அந்தப் புதுக்குறள்..
பொய்யர்தாம் என்றேனும் மெய்கூறின் அம்மெய்யும் பொய்யெனக் கருதப் படும்.
நாகலிங்கம் என்று ஒரு பெரியவர். சினிமாத் துறை பழக்கமுள்ளவர். திரைக்கதைகளை செப்பனிட்டுத் தரும் பணியில் இருந்திருக்கிறார். அவரிடம் பேசியதில் அவர் பழுத்த அனுபவம் உள்ளவர் என்று எனக்குத் தெரிந்திருந்தது. அப்போதே அவருக்கு வயது 75ஐத் தொட்டிருந்தது. இந்த மெய்ப்பைப் பார்த்தவர் வெடுக்கெனச் சிரித்தார். எனக்கோ, ஏதோ தவறு நேர்ந்துவிட்டதோ என்று உள்ளம் பதறியது. கலவரத்துடன் அவர் முகம் பார்த்தேன்….

சிரித்தபடியே என்னிடம் கேட்டார்…
“1330 குறள்களை எழுதின அவரோட பேர் என்ன தெரியுமா?” கேட்டார் சலனமில்லாமல்.
“திருவள்ளுவர்” என்றேன்.
“அது நாமாக வைத்த பெயர்… அவரோட பேர் என்ன தெரியுமா?”
“தெரியாது.”
“1330 குறள் எழுதின அவரே தன் பேரை எங்கயுமே சொல்லிக்கலை… நீ ஏதோ குறள்னு ஒண்ணு எழுதிட்டு…. அந்தக் கவிதை அச்சாகியிருக்கற 10 பாயிண்ட் லெட்டர் சைஸை விட பெரிதாக உன் பேரை 14 பாயிண்டில் போட்டிருக்கே….”
எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. வேதம்புதிது படத்தில் சத்யராஜ் கன்னத்தில் சிறுவன் அங்கயும் இங்கயும் அடித்து திருப்பும் சத்தமும் காட்சியும்தான் மனதில் ஓடியது.

எழுத வந்த துவக்கத்திலேயே பேர் ஆசையை விட்டுவிட்டேன். பேராசையையும்தான்! எழுத்தாளன் என்ற கர்வத்தை மூட்டை கட்டி பரண் மேல் போட்டு விட்டு, பத்திரிகையாளன் என்ற ஏணிப்படியாய் என்னை மாற்றிக் கொண்டேன். அந்தத் துவக்கம்… எனக்குள் பெரும் மாற்றத்தைத் தந்தது. அதற்குக் காரணமாய் அமைந்தவர் நாகலிங்கம் தாத்தா… அவரை நன்றியுடன் இப்போதும் நினைவு கூர்கிறேன்..!

செங்கோட்டை ஸ்ரீராம் in Dinamani ….Blog.dinamani.com

மனம் தேடி தவிக்கிறது …

வளர்ந்தாலும் உணவை
வாயில் ஊட்டிவிடும்
அம்மாவையும்

வரும்வரை வாசலிலேயே
தூங்காமல் காத்திருக்கும்
அப்பாவையும்

வாஞ்சψயாய்த் தலைகோதி
முத்தமிட்டு நெட்டி முறிக்கும்
பாட்டியையும்

டி.வி. ரிமோட்டுக்கு தினமும்
சண்டையிடும் அருமைத்
தம்பியையும்

ஊர்வம்பு பேசியபடியே
வீட்டைக் கூட்டிப் பெருக்கும்
கண்ணம்மாவையும்

“உன் கையாலே போணி பண்ணு’ என
உரிமையுடன் கேட்கும்
பூக்காரம்மாவையும்

மனம் தேடித் தவிக்கிறது…
அமெரிக்க தேசத்தின்
அந்நிய முகங்களிடையே….

– ஜி. ராஜி, சென்னை in Mangaiyar Malar


BACK to the Main Page