என் அன்பான ரங்கநாதன் தாத்தாவுக்கு கனகாபிஷேக வாழ்த்துக்கள்

Vidya with her grandparents

என் பிறப்பு முதல் உமது மறைவு நாள் வரை
உம்முடனும் ஜயா பாட்டியுடனும் புகைப்படங்கள் இருக்கின்றன
அந்த நாட்களில் உங்களுடன் பழகும் பாக்கியம் கிடைத்தது

ஆனால் நாட்கள் ஓட ஓட தங்குமிடம் மாற மாற
உங்களுடன் பழக நேரம் கிடைக்கவில்லை, இடமாற்றம் பழக விடவில்லை
காலங்கள் ஓட என் வளரும் பருவத்தில் பள்ளி விடுமுறை நாட்களில்
சென்னையில் சில நாட்கள் திருவான்மியூரில் தங்குவோம்

தாத்தா, என் மனதில் நிழலாடும் சம்பவம் கூறினால் மேலிருந்து சிரிக்க மாட்டீரே?
வீட்டில் முதல் அறையில் நீர் நாற்காலியில் அமர்ந்து
தயிர் குப்பியை குலுக்கி குலுக்கி வெண்ணை எடுக்க முயற்சித்த காட்சி
என் மனதில் பசுமையாய் பதிந்து விட்டது

உங்களின் சதாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பாக்கியம் பெற்றேன்
தங்களிடமிருந்தும் பாட்டியிடமிருந்தும் ஆசீர்வாதம் பெற்றேன்
யான் பெற்ற அந்த பாக்கியத்தை நான் மட்டும் அல்ல
ரங்கநாதன் குடும்பத்தை சார்ந்த அனைவரும் மகிழந்து பெற்றோம்

இதற்கும் மேல் சந்தோஷம் அளித்த நாட்கள் ஏது?
என்னுடைய இரண்டு தாத்தாவும் இரண்டு பாட்டியும்
எங்களுடன் அந்த மூன்று மாதங்கள்
ஆஸ்திரேலியாவில் இருந்த நாட்கள்

சென்னை தூசியிலும் புகையிலும் உடல் பாதித்து
எப்பொழுதும் தும்மும் தாங்கள்
எங்களுடன் ஆஸ்திரேலியாவில் லிச்சி மற்றும் விதவிதமான ஐஸ்கிரீம் உண்டபின்னும்
ஒரு தும்மலுமின்றி உடல் நலத்துடன் இருந்த அற்புத நாட்கள் மனதில் நிழலாடுகறது

அந்த மூன்று மாதங்கள் உம்மிடமிருந்து கற்றவை பல
உம்முடன் இலலாமல் நான் இழந்தவை எத்தனை தாத்தா?
ஆனால் என் தந்தை, தாயின் ஒழுக்கத்தின் காரணம் புரிந்த தருணம் அது
சிறப்பான பெண்கள், பிள்ளைகளை ஈன்று பெரும் பேறடைந்த எனதருமைத் தாத்தா

சீட்டாட்டம், பாட்டுப்போட்டி, நடனம் என்று விதவிதமான களங்களில் பொழுது போக்கி
ரசித்துக் கொண்டு இருக்கும் தாத்தாவை நான் அந்த மூன்று மாதம் மட்டும்தான் பார்த்தேன்
என் குழந்தைப் பருவத்தில் உங்களுடன் அதிகம் இருக்க முடியாத ஏக்கமோ என்னவோ
அந்த முன்று மாத நினைவுகள் என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டன

அந்த நாளில் தாத்தா, தாத்தா என்று சுற்றி சுற்றி வர பயம் எனக்கில்லை
இன்று சுற்றி வர நான் நினைத்தாலும நீர் உலகிலில்லை
ஆனால் என் மனதில் உள்ளீர் தாத்தா

தாத்தா, கர்வம் கொள்வது தவறு என்கிறார்கள்
என்செய்வது? முடியவிலலை
ரங்கநாதன் தாத்தவின் பேத்தி என்பதில் கர்வம் கொள்கிறேனே


என் நாடடியமும், பாட்டும் விரும்பி விரும்பி கேட்ட அந்த தாத்தாவிற்கு
உங்களுடன் அதிக நேரம், காலம் செலவிட முடியாத
இந்தப் பேத்தியின் மனமார்ந்த மன்னிப்பையும், பாசததையும் ஏற்று
காலம் முழுவதும் நற்செய்கைகள் மட்டுமே நான் செய்ய
உங்கள் அன்பான ஆசிகளைப் பொழிய வேண்டுகிறேன்.
தங்களின் மூன்றாவது பேத்தி

வித்யா ராகவன்
1st July 2017
click here to read the above in Roman script (as sent by Vidya)


click here to go back