அம்மா

If you cannot read Tamil but can understand Tamil, you can click on the link at the beginning of the write-up to listen to the audio in author's voice

click here to listen to the write-up

அம்மா - இந்த சொல் கேட்க எவ்வளவு ஜீவராசிகளுக்கு ஆனந்தம். கடவுளை அவள் ரூபத்தில் காண்கிறோம். தன்னலமற்ற சேவை செய்யும் ஒரே ஜீவன் நம் தாய் தானே.

இப்படி எத்தனையோ பேர் இன்னும் அருமையாக அழகாக எழுதியிருப்பார்கள். நாம் அம்மா என்று யோசித்ததுமே என்னென்ன எண்ணங்கள் தோன்றி கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது. அவருடைய அழகு ஒன்பது கஜ புடவையில் வெகு நேர்த்தியாக கட்டிக்கொண்டு சிரித்த முகத்துடன் எப்போதும் இருப்பார். அவர் இன்முகத்துடன் எல்லோரையும் அரவணைப்பது கண்டு நான் பார்த்து மிக வியந்திருக்கிறேன்.

தன்னுடைய எட்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார். எல்லோரையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்த பெருமை அவருக்கு நிறையவே உண்டு. அம்மா உங்களுக்கு நன்றி கூற ஏழேழு ஜன்மமும் போதாது. உங்களின் ஆசியுடன் உங்களைப்போல் எல்லோருக்கும் உதவி செய்து நல்ல மனிதராக வாழ்ந்து காட்ட முயற்சிக்கிறோம்.

நான் கல்யாணம் ஆகி வந்ததிலிருந்து பார்த்திருக்கிறேன். என்றும் சிரித்த முகத்துடன் எப்போதும் இருப்பார். அவருடைய சுறுசுறுப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அழகாக செயலை முடித்து பெருமாளுக்கு சொல்வார். வேலை இல்லாத நேரங்களில் புத்தகங்கள் படிப்பார். அவருடைய இந்த ஆர்வத்தை கண்டு மிக வியந்திருக்கிறேன். கதையையும் அழகாக சொல்வார். பேரன்கள் பேத்திகளிடம் கொள்ளை பிரியம்.

குழந்தைகளுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் கையில் சாதம் பிசைந்து கொடுத்தார் அப்பா அம்மா சதாபிஷேகத்தின்போது. அம்மா எனக்கு ஸ்தோத்திர மாலை புத்தகம் வாங்கிக் கொடுத்தார். சில ஸ்லோகங்களை சொல்லிக் கொடுத்து தினமும் சொல்லுங்கள் என்று எங்கள் இருவருக்கும் சொல்லிக் கொடுத்தார். அவர் கையெழுத்திட்ட புத்தகத்தை இன்றும் வைத்திருக்கிறேன்.

எங்களுடன் Bangalore, Nasik மற்றும் Australia வந்து இருந்தது சுவையான நாட்கள்.

சந்திரா
மே 20, 2021



BACK