கண்ணன் அண்ணா

If you cannot read Tamil but can understand Tamil, you can click here to listen to the audio of this article in author's voice

கண்ணன் அண்ணா,

Pasura Ramayanam(Click on image to read பாசுர ராமாயணம் )
நீங்கள் எங்களுக்கு God-father மட்டுமல்ல ஒரு good teacher and guide. நான் கல்யாணம் ஆகி வந்ததிலிருந்து உங்களுடன் உரையாட நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்தது. நீங்கள் அடிக்கடி Bangalore வரும்போதெல்லாம் ஆவலுடன் காத்திருப்போம். என்னுடைய personal developmentல் முக்கியமாக நான் நினைத்து ஆனந்திப்பது/appreciate பண்ணுவது நீங்கள் எனக்கு பெரியவாச்சான் பிள்ளை அருளிய பாசுரப்படி இராமாயணம் தினமும் படிம்மா என்று சொல்லிக்கொடுத்ததுதான்.

இன்றளவும் தினமும் பாராயணம் பண்ணும்போது உங்களை வாழ்த்தி வணங்குகிறேன். அதுமட்டுமின்றி எனக்கிருந்த தமிழின் மேல் இருந்த ஆர்வம் உங்களுக்கும் நிறைய உண்டு. வித்யா நித்யாவிற்கு தமிழ் சொல்லிக் கொடு என்று சொன்னீர்கள். அதன்படியே அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க முற்பட்டேன் எனக்கு தெரிந்த அளவில். மிகவும் ரம்யமான நாட்கள் உங்களுடன் spend பண்ணிய Bangalore days.

நாங்கள் நாசிக் சென்ற போதும் நீங்கள் எல்லோரும் Bombayயில் இருந்ததால் அடிக்கடி meet பண்ணும் opportunityயும் கிடைத்தது. நீங்களும் மன்னியும் Australia வந்தது மறக்கமுடியாத அனுபவம். நாம் எல்லோரும் Canberra வந்து stay பண்ணி சுற்றிப்பார்த்தோம். War Memorial ரொம்ப அனுபவித்துப் பார்த்தீர்கள். அதுமட்டுமின்றி ப்ரசாத்தும் ரூபலும் உங்களை காஞ்சிபுரம் கூட்டிவந்தது ஒரு சுவையான/ most scary அனுபவம். கஷ்டப்பட்டு மாடி ஏறி வந்தீர்கள். அதைப் பார்த்த போது மிகவும் வேதனை அடைந்தோம். நாங்கள் உங்களுடன் spend பண்ணிய பொன்னான நாட்களை நினைத்து மகிழ்கிறோம்.

எவ்வளவு சிரத்தையுடன் நடப்பது நல்ல ஆரோக்கியமான உணவு உண்பது நிறைய படிப்பது என்று discipline ஆக இருந்தது வந்தீர்கள். அப்படிப்பட்ட நீங்கள் சிரமப்பட்டதைப் பார்த்து வருந்தாதவர்களே கிடையாது. எவ்வளவு சகிப்புத்தன்மை. நம் குடும்பத்தில் எல்லோரும் எவ்வளவோ ப்ரார்த்தித்தும் எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற வருத்தம் பெரும் குறை என் மனதை வாட்டுகிறது. இனி நீங்கள் என்றும் கஷ்டப்படத் தேவையில்லை.

kannan80mநாங்கள் தான் உங்களை பார்க்க முடியவில்லை. உங்களை ரொம்ப miss பண்ணுகிறோம் அண்ணா. உங்களுடய கடைசி நாட்களில் முகுந்த் உங்கள் அருகில் இருந்தது அவனுக்கு ஆறுதலாக இருக்கும். ஜகனுடய busy schedule and demanding high responsibility யிலும் உங்களை பார்த்துப் பார்த்து செய்தான். நீங்கள் மூன்று ரத்தினங்களை பெற்றிருக்கிறீர்கள். அதை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். இதையெல்லாம் நினைத்து மன்னி இனி தன்னை சமாதானம் செய்து கொண்டு தன்னையும் நன்றாக பார்த்துக் கொண்டு வாழ்வார்கள் என்று நம்புகிறோம்.



Thanks anna for everything.
அன்புடன்
சந்திரா.



BACK