|
என் அண்ணா (கண்ணன் என நாங்கள் அழைக்கும் நரசிம்மன்) - அவரைப்பற்றி எண்ணும் போதே அவருடைய அன்பு, பரிவு, பாசம், கண்டிப்பு, இவைகள் தான் கண் முன்னே வந்து போகின்றன.
சிறுவயதில் எங்கள் அனைவருக்கும் நல்ல ஆசானாக வழி காட்டி இருக்கிறார். பரீட்சை நாட்களில் முதல்
நாள் கேள்விகளைக் கேட்பார். அடுத்த நாள் பரீட்சை முடிந்து வரும்போது அவரிடம் பதில் சொல்லாமல் உள்ளே நுழைய முடியாது. 😁
சிறுவயதில் நான் க்ரைம் நாவல்கள் எல்லாம் படிப்பேன். என்னைத்திட்டி உருப்படியாக நியூஸ் பேப்பர், ஜெனரல் நாலட்ஜ் புத்தகங்கள் படிக்கச் சொல்லுவார்.
அவருக்கு பாடல்கள், புத்தகங்கள், கவிதை, நாடகங்கள், அரசியல், விளையாட்டு அனைத்துலும் பயங்கர ஈடுபாடு.
பாரதியாரின் கவிதைகள் ரொம்பப்பிடிக்கும். உடல்நிலை சரியில்லாத காலத்திலும் தன்னைப்பார்த்துக் கொள்ளும் வெங்கடேஷ் மற்றும் டிரைவர் மோகனுடன் விடாமல் கிரிக்கெட் பார்ப்பார்.
என்னுடைய பள்ளி விடுமுறை நாட்களில் என்னை நிறைய ஆங்கிலப்படத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.
தீபு , ஶ்ரீராம் இறந்தபோது அவர்கள் பெயரில் பணம் டெபாசிட் செய்து சாரதா வித்யாலயாவில் வருடாந்தர விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்க ஏற்பாடு செய்திருந்தார். திருமதி மைதிலி (என் மாமா பெண். அப்போது சாரதா வித்யாலயாவின் தலைமை ஆசிரியை) எங்களை விழாவுக்கு அழைத்த போதுதான் அதை அறிந்தோம். நெகிழ்ந்தோம்.
விருந்தினரை மன்னியுடன் சேர்ந்து உபசரிப்பதில் வல்லவர். டிரஸ்ட் மீட்டிங் என்றால் எங்கள் வருகையை காலையிலிருந்தே எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்.
அவருடனான நினைவுகள் அற்புதமானவை.
அவருடைய ஆசியுடன்
புஷ்பா பார்த்தசாரதி
மே 1, 2021
|