காபியில் கலை!

அமெரிக்கானோ, காபச்சினோ, எக்ஸ்பிரஸோ, ஐரீஷ், கேப மோச்சா, லாட்டி… இவையெல்லாம் உலகம் முழுக்க உறிஞ்சுக் குடிக்கப்படும் காபி வகைகளின் ஒரு சில பெயர்கள்.
கடைசியாகச் சொன்ன லாட்டி காபி இத்தாலி நாட்டின் சிறப்பு பானம், இந்தியாவின் டிகிரி காபிபோல. சாதா ப்ரூ காபியை நாலு ஆத்து ஆத்தினாலே நுரை பொங்கும். எக்ஸ்பிரஸோ, காபசினோ போன்றவற்றில் நுரை கொஞ்சம் தூக்கலாக இருக்கும். லாட்டியில் பாலின் நுரை மட்டும்தான் காபியே. சுமார் 5 மில்லி மீட்டர் உயரத்திற்கு உருவாகும் நுரையில் லாட்டி காபியைத் தயாரிப்பார்கள். இத்தாலியர்களின் காலை நேரம் இந்த காபி இல்லாமல் கழியாது.
காபியை மட்டுமா அவர்கள் ருசித்து, ரசித்துக் குடிப்பார்கள். காபியில் கலையையும் அவர்கள் கலந்து குடிப்பார்கள். நீங்களே பாருங்களேன்.








Click here to visit Kalkandu (Lena Tamilvanan) website
***********************