சிரிக்க, சிந்திக்க

பொருளாதாரம்

பிரபல பொருளாதார நிபுணர் ரயிலில் போகும்போது பக்கத்தில் இருந்த கல்லூரிப் பெண்ணிடம் பேசிக்கொண்டு வந்தார்.
நீங்க என்ன பண்ணறீங்க என்று கேட்டாள் அவள்.
நானா? இந்தியப் பொருளாதாரத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அவர்.
அந்தப் பெண் உடனே நான் போன வருஷமே அதைப் பாஸ் செய்துவிட்டேன்


பாப்கார்ன்

சோளத்தில் இருந்துதான் சோளப்பொரி ( பாப்கார்ன் ) தயாரிக்கப்படுகிறது . சோளத்தைக் கவனியுங்கள் . அதன் மத்தியில் ஈரப்பதமும், அதைச் சுற்றிலும் கடினமான மாவுச்சத்தும் இருக்கிறது . சோளப்பொரியைத் தயாரிக்க, சோளத்தைச் சூடாக்குவார்கள் . அப்போது, அதன் மத்தியில் உள்ள ஈரப்பதம் விரைவில் வெப்பமடையும் . இதனால் உருவாகும் நீராவி, கடினமான மாவுச்சத்து பகுதியில் ஊடுருவி வெளியேறும் . இதன் விளைவாக, கடினமான மாவுச்சத்து வெந்து மென்மையாக மாறும் . நீராவி வளைந்து நெளிந்து வெளியேறும் என்பதால், அதற்கு ஏற்றபடி மாவுச்சத்து பகுதியும் வளைந்து நெளியும் . இந்த செயல்பாடுதான், சோளப்பொரியை பூ போல் விரிய வைக்கிறது .

என்னா_வெயிலு

மதியம் ஜூஸ் குடிக்கக் கடைக்கு போனா கடையில, மேஜை_காலி_இல்ல.. எல்லாம் காதல் ஜோடிங்க ..நான் தனியா வேற போயிருந்தேன்.. என்னடா பன்னலாம்னு யோசிச்சேன் ..
போன எடுத்து காதுல வச்சிட்டு ..சத்தமா..
'மச்சி_உன்_ஆளு_யார்கூடவோ_இங்க_ஜூஸ்_குடிக்குதுடா'_ அப்படின்னேன் அவ்ளோதான் - அஞ்சு_டேபிள் காலி
ஹாயா உட்கார்ந்து ஜூஸ் குடிச்சிட்டு வந்துட்டேன்


ஆலய வாத்தியங்கள்

ஆலய வாத்தியங்கள் பஞ்சபூத அடிப்படையில் ஆனவைதான்
1 . ப்ருதிவி ( நிலம் ) வாத்யம் : மரத்தினால் செய்யப்பட்டவை
2 . அப்பு ( நீர் ) வாத்யம் : உலோகத்தினால் செய்யப்பட்டவை
3 . வாயு வாத்யம் : துளை உள்ள வாத்யங்கள்
4 . ஆகாய வாத்யம் : சங்கநாதம், தாள வாத்யம்
5 . அக்னி வாத்யம் : நரம்பு வாத்யங்கள்


ஒரே ஒரு சந்தேகம்

பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்.
"தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான்.
"சொல்லுங்க அண்ணா ... தெரிஞ்சிக்கிறேன்"
"தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..."
"ம்ம்ம்ம்"
"முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்வியெல்லாம் எழுதணும்"
"ம்ம்ம்"
"இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்வியெல்லாம் எழுதணும்"
"ம்ம்ம்"
"அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்வியெல்லாம் எழுதணும்"
"ம்ம்ம்"
"கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்வியெல்லாம் எழுதணும் ... இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு"
"ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"
"என்ன?"
"மூணு மணி நேரமும் கேள்வியயே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??"
"நமக்குன்னு எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ??"


யானையின் பற்கள்

யானையின் பற்கள் விசித்திரமானவை . பிறந்த யானைக்குட்டிக்கு நான்கு பற்கள் இருக்கும் . அவை பலமிழந்து விழுந்ததும் மீண்டும் நான்கு பற்கள் முளைக்கும் . இப்படி யானையின் ஆயுளில் அதிகபட்சமாக 7 முறை பற்கள் முளைக்கும் . அதாவது, ஒரு யானையின் ஆயுளில் அதற்கு மொத்தம் 28 பற்கள் இருக்க வாய்ப்பு உண்டு . சராசரியாக, ஒரு பல்லின் எடை 4 கிலோ அளவில் இருக்கும்.

சனிப்பெயர்ச்சி

புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.
ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா? என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.
என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே என்று மனைவி கேட்க, அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி என்றான் கணவன்.


தேங்காய் எண்ணெயில் ஓடும் விமானம்

உலகளவில், முன்னணி விமான நிறுவனமான ' வெர்ஜின் அட்லாண்டிக் ' நிறுவனம், தேங்காய் எண்ணெயை எரிபொருளாகக் கொண்டு விமானத்தை இயக்கி உள்ளது . பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், மாற்று எரிபொருளாக, பயோ எரி பொருளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது . இதற்கான முயற்சியில், வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது . இதன் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணை மற்றும் தென் அமெரிக்காவில் அமேசான் காடுகளில் விளையும் ஒரு வகை பனை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் பாபாசூ எண்ணையில் இருந்து உருவாக்கப்பட்ட புதிய எரிபொருளை, இந்நிறுவனம் பயன்படுத்தியது . லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து, நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வரை, இந்த எரிபொருளை கொண்டு, போயிங் ரக ஜெட் விமானம் இயக்கப்பட்டது . இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றிருக்கிறது . விமானத்தில் நான்கு எரிபொருள் டாங்குகள் உள்ளன . அதில் ஒன்றில், புதிய எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது . இந்த விமானத்தில், பயணிகள் பயணம் செய்யவில்லை . பைலட்டுகளும், தொழில்நுட்ப நிபுணர்களும் மட்டுமே பயணம் செய்தனர் .


BACK to the Main Page