மறைபுதிர் குறுக்கெழுத்து குறித்து நான் எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்? (புத்தகத்தை டிசம்பரில் வெளியிட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நிச்சயமாக பொங்கலுக்குள் பதிப்பாகும்)சுமார் 200 பக்கங்கள் உள்ளபுத்தகத்தில் முன்னுரை, முடிவுரை மற்றும் ஆறு அத்தியாயங்கள் உள்ளன. மிகப் பெரிய ஐந்தாம் அத்தியாயம் 70 பக்கங்களில 35 குறுக்கெழுத்துகள் கொண்டது. முதல் இரண்டு அத்தியாயங்கள் மற்றும் முன்னுரை எழுதி முடித்து விட்டேன். இதுவரை 70 பக்கங்கள் எழுதியுள்ளேன் பின் அட்டையில் புத்தகத்தைப் பற்றி நான் எழுதியது.
**************
இப்புத்தகம்
கருப்பு வெள்ளைக் கட்டங்களுடன் இடை லிபி (7)
இந்நூலை எழுதியவர் யார்?
புத்தகங்கள் குழந்தைகளைப் போல. குழந்தைகள் கருப்பா , சிவப்பா : குழந்தைகளின் தந்தை யார் , தாய் யார் என்று பார்க்காமல் அவர்களின் குறும்புகளை மட்டுமே ரசிக்க வேண்டும். ஆகவே இதை எழுதியது யார் என்பது அவிழ்க்காத புதிராகவே இருக்கட்டுமே. தெரிந்தால்தான் வாங்குவேன் என்று அடம் பிடிப்பவராக இருந்தால் என் பெயர் குறுக்கெழுத்துக் குறிப்பாகவே இதோ.
**************
புத்தகத்திற்கு நானும், என் மனைவியும் இரண்டு பெயர்கள் தேர்வு செய்துள்ளோம்.
அக்டோபர் 31 வரை உங்கள் பரிந்துரைகளை வழங்கலாம். கீழே உள்ள படிவத்தை நிரப்பவும். நன்றி.
|