பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசனின் நினைவு நாள் (அக்டோபர் 17)

மறைபுதிர் குறுக்கெழுத்து குறித்து நான் எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்திலிருந்து சில பத்திகள்.... (புத்தகத்தை டிசம்பரில் வெளியிட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்)


பக்கத்தில் அழைத்தேன் எ்ன்பது கண்ணதாசனின் பாடல் வரிதானே?
ஆம் இந்த பாடல் வீர அபிமன்யு படத்தில் கண்ணதாசன் எழுதியது. 1946ல் பிறந்த நான் 1970ல் ரயில்வேயில் சேர்ந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும்வரை, ரசித்த பாடல்கள் எல்லாவற்றிலுமே கண்ணதாசன் இருந்தார். எனது தலைமுறை கண்ணதாசன் – கே.வி.மகாதேவன், கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் (ராமமூர்த்தி) இவர்கள் பாடல்களுக்கு தலையாட்டிதான் வளர்ந்தது. ‘கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் என்கிற இந்த இரண்டு மாபெரும் ஆளுமைகள் ஒன்றுசேர்ந்தது தமிழுக்குக் கிடைத்த பெரிய வரம்’ என திரு .வைரமுத்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

கண்ணதாசனுக்கு இயல்பாகவே சிலேடை வந்து அமையும். மூன்றே பாடல்களில் கண்ணதாசன் தனது அளவற்ற சிலேடைத் திறமையைக் காட்டியுள்ளார். அவை வீர அபிமன்யுவில் தேன், பலே பாண்டியா படத்தில் காய், காட்டு ரோஜா படத்தில் ஊர். இந்த பாடல்களில் சிலவற்றை குறுக்கெழுத்து குறிப்புகளாக பின்னர் விவாதிப்போம். கண்ணதாசன் சிலேடையின் மாமன்னர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதனால்தான் நான் அவரை சிலேடையை விவாதிக்கும் எனது புத்தகத்தின் பக்கத்தில் அழைத்தேன்

ரகசிய போலீஸ் படப்பாட்டு வாலி எழுதியது என்று என் தவறை சுட்டிக் காட்டிய குணா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி


பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் -162 (19-10-2020 - Tribute to Kannadasan) எல்லா குறிப்புகளும் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளிலிருந்து.

பார்த்தசாரதியின் புதிர்கள் -162 (19-10-2020 - Sunday Special - 5 குறிப்புகள்)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 162 -- a. உலகம் பின் கள் கண்டேன் (5)=பார்-த்-தேன்                      b. இதற்குப்பின் மது நாவில் சர்க்கரையானேன் (5)=இனி-த்-தேன்

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 162 What? see and keep vision (3,3)=என்ன பார்-வை (What=என்ன, See=பார், Keep=வை) I know that the definition is not complete. But since I had mentioned that all are Kannadasan's songs, I left it incomplete.

Pictorial Puzzle குறிப்பு - 162 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
                    
162a. விடை=அறுபடை வீடு கொண்ட    162b. விடை=கோயில் மணி ஓசை

விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three, four or five *s. If all five are wrong, their name will not be published.)




Back



Click here to visit my Home Page


ஸௌதாமினி *****

முத்து ***

மீ கண்ணன் ****

அம்ருதா *****

பாலூ மீ ****

மீனா **

ராமராவ் *****

Hemalatha ****

ஆர்.நாராயணன். ****

GUNA *****

K. Natarajan *****

புஷ்பா ***

சிவக்குமார் ***

Madhavan ****

R.usha ****