பார்த்தசாரதியின் புதிர்கள் -91 (09-08-2020)
பா பு தொடர்ச்சியாக 3 மாதங்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்த பா பு - 91 சொல் கலை 2 இங்கே க்ளிக் செய்யவும்
பார்த்தசாரதியின் புதிர்கள் -91 (09-08-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 91 --விடை நிமிர்ந்த நன்னடையுடன் புதுமைப்பெண் கொள்ள வேண்டியது கண்ணோடு கண் காணல்? (5)=நேர்-பார்வை (கண்ணோடு கண் =நேர் , காணல்=பார்வை)
ஞான நல்லறம்வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.
. .
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்..
.
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்து இங்கே
திலக வாணுதலார் தங்கள் பாரத தேசம் ஓங்க உழைத்திடல் வேண்டுமாம்
(பாரதியாரின் புதுமைப் பெண், செய்யுள்)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 91 --விடை Beat with impression for footprint (6)=அடி-ச்-சுவடு (Beat =அடி , Impression=சுவடு, பலர் அடித்தடம் என விடையளித்துள்ளனர். அடித்தடம் , அடிச்சுவடு இரண்டுமே ஒரு பொருள் கொண்டவைதான். ஆனால் தடம் என்பதற்கு நான் refer செய்யும் இரண்டு Dictionaryயிலும் Path என்ற சொல் மட்டும் உள்ளது. சுவடு என்பதற்கு மட்டுமே Impression என்ற சொல் உள்ளது.)

Pictorial Puzzle குறிப்பு - 91 - --விடை =பெரிய-புராணம்
விடை(கள்) அனுப்பினோர் - 13 பேர் (** indicates All correct answers)
Back
Click here to visit my Home Page