பார்த்தசாரதியின் புதிர்கள் - 1307 (17-12-2023) விடைகள்


பக்தி, இசை நிறைந்த மார்கழி இன்று ஆரம்பம். 2006லிருந்து மார்கழி எனக்கும் என் மனைவிக்கும் முக்கியமான மாதம். தினமும் காலை 5.45க்கு வீட்டின் அருகிலுள்ள சத்ய வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் செல்வோம். வீட்டிற்கு வந்தபின் அவசரமாக (மனைவி) சமைத்து இருவரும் உண்ட பின் கச்சேரிகள் கேட்க மைலாப்பூர் செல்வோம். இரண்டு கச்சேரிகளாவது கேட்டபின் வீட்டிற்கு வந்தும் Jaya TV, வசந்த் TV என்று கச்சேரிகள் தொடரும். 2016ல் அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) மாதம் இருமுறை அமைத்துக் கொண்டிருந்தோம். ஒருமுறை வீட்டு ரிப்பேர்களும் இருந்ததால் குறுக்கெழுத்து அமைக்க முடியவில்லை. அப்போது (டிசம்பர் 2016) நான் எழுதிய 'கவிதை'.

ஆதவன் எழுமுன்னரே திருப்பாவை முப்பதும் தப்பாமே
மாதவன் சத்யவரதராஜனுக்கு வணக்கம் செலுத்தியபின்
கயிலைநாதர் போற்றும் கர்நாடக இசை
மயிலையில் மட்டுமே அதிகம் கிடைப்பதால்
உண்டியாக்கி பிரசாதப் பொங்கலுடன் உண்டபின்
வண்டியெடுத்து ஓடும் எங்களை
பாழும் நேரம் குறுக்கெழுத்து அமைக்க விடவில்லையே
ஏழுநாள் காக்க அன்போடு வேண்டுகிறோம்

இவ்வருடம் சென்னையில் 5 நாட்கள் இருப்பதால் கோவில் நிச்சயம் உண்டு. இன்று 5 மணிக்கு கோவில் சென்று 6.40க்கு வீடு திரும்பினோம். நாளையிலிருந்து 5.30 மணிக்கு. உடல் ஒத்துழைத்தால் தினம் 2 காலைக் கச்சேரிகள் மியூசிக் அகாடமி அல்லது நாரத கான சபாவில் கேட்போம்.

இன்றிலிருந்து நான்கு குறிப்புகளில் ஒன்று திருப்பாவைகளில் இருக்கும் ஏதாவது ஒரு சொல் விடையாக வருமாறு இருக்கும். இன்று ஒன்றாம் திருப்பாவையிலிருந்து. உங்களுக்குத் திருப்பாவை தெரிந்திருக்கத் தேவையில்லை. குறிப்புகளில் இருந்தே solve செய்யலாம்.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1307 A--விடைகள் இளக்காரம் பாதி (பஞ்சாபி) சர்தார் வேகம் குறைந்தால் காட்டுராஜாக் குட்டி (3,4)(திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் முதல் பாசுரம்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.


பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1307 B - Is it nail without head that turns after stone ragam (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1307 - C (Answers in English) திரும்பும் தொகை நான் முதலில் ரொக்கம் சேர்த்த இசை (5)

- Pictorial Puzzle குறிப்பு - 1307 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்கவும்" )>


                    



விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

அம்ருதா *****

ஆர் சந்தானம் *****

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

ஸௌதாமினி *****

Hemalatha *****

மீனா *****

ராம்கி கிருஷ்ணன் *****

மீ கண்ணன் *****

அ. ஜோசப் அமிர்தராஜ் *****

அருந்ததி *****

சுதா ****

ராமராவ் *****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

சக்தி *****

K. Natarajan *****

மாலதி *****

சிவக்குமார் *****

ஶ்ரீதரன் *****

சாந்தி நாராயணன் ****(சிங்கம் is incomplete)

K.Latha *****

Murali *****

சந்திரா ****

ஊர்மிளா தேவநாதன் *****

Back



Click here to visit my HomPage