இன்றைய படப் புதிருக்கு சிறிய திருவடி என்பதே சரி. எனினும் சின்ன திருவடியையும் ஏற்றுக் கொண்டேன்.
வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது அதன் மீது திருமாலின் திருவடி படுகின்ற தன்மையால் திருவடி என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. கருடன் திருமாலின் நித்திய வாகனம். அனுமனும் இராமனுக்கு வாகனமாக விளங்கியவன்தான். கருடன் பெரியவர். ஆகவே பெரிய திருவடி என்று கருடனையும், சிறிய திருவடி என்று அனுமனையும் அழைக்கிறார்கள்.
அனுமன் இராமனுக்கு வாகனம் ஆனதை விவரிக்கும் கம்பராமாயணப் பாடல்கள் கீழே. இராவணனுடன் முதல் போர் நடக்கப் போகிறது. ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்பட்டத் தேரில் இராமனின் எதிர் வந்து நிற்கிறான் இராவணன். இராமனோ, தரையின் மேல் நிற்கிறான். அனுமனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
நூறுபத்துடை நொறில் பரித்தேரின்மேல் நுன்முன்
மாறில் பேரரக்கன் பொர நிலத்து நீ மலைதல்
வேறுகாட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும்
ஏறுநீ ஐய என்னுடைத் தோளின்மேல் என்றான். 217-
(ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் தேரின்மேல் உன் முன்னால் அரக்கன் வந்து நிற்கவும், நிலத்தின் மேல் நின்றவண்ணம் நீ போர்புரிவதும் குறைவுடையதாகும். வெறுமை காட்டி நிற்பதற்கு நீ என்ன தனியனா? நாங்களில்லையா உனக்கு? என் தோள்கள் உன்னைத் தாங்கும் அளவுக்கு வலிமையோ, தகுதியோ உடையன அல்லவை என்றாலும், மெல்லியவையே என்றாலும், என் தோளில் ஏறுவாய் ஐயனே!)
‘நன்று, நன்று!’ எனா, நாயகன் ஏறினன், நாமக்
குன்றின் மேல் இவர் கோள் அரிஏறு என; கூடி,
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர்; ஈன்ற
கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான். 218-
(நாயகன்- தலைவனாகிய இராமபிரான்; நன்று நன்று எனா-
நல்லது நல்லது என்று சொல்லி; ஏறினன்- (அனுமன்
வேண்டலையேற்று) ஏறியமர்ந்தனன்; நாமக்குன்றின் மேல்
இவர் – புகழ் மிக்க மலையின் மேலே ஏறி நிற்கும்; கோள்
அரி ஏறு எனக் கூறி- கொல்லும் வன்மை மிக்க சிங்க ஏறு
என்று கூறி; அன்று – அப்போது; வானரர் ஆசிகள்
இயம்பினர்- தேவர்கள் வாழ்த்துக் கூறினர்; ஈன்ற கன்று
தாங்கிய தாய் என மாருதி களித்தான் – ஈன்ற கன்றினைத்
தாங்கிய பசுவைப் போல அனுமன் உளம் களி கூர்ந்தான்.)
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1648 A--விடைகள் இந்த இடத்திலா தலையின்றி தலை அடக்கிய ஒப்பனை? (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1648 B - Affectionate chariot spoils an element (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1648 - C (Answers in English) காற்று எரிபொருள் மாற்றியது தோல்வி (7)
Pictorial Puzzle குறிப்பு - 1648 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)