நேற்று Pictorial Puzzle குறிப்பில் கோமானை (திருப்பாவை - 12 -கனைத்திளங் கற்றெருமை)பார்த்தோம். இன்று தமிழ் குறுக்கெழுத்து குறிப்பில் வெள்ளி (எழுந்து வியாழம் உறங்கிற்று) (திருப்பாவை - 13 - புள்ளின் வாய் கீண்டானை).
வெள்ளி எழுவதைப் பார்த்து விட்டு நீராடுவது தமிழர் வழக்கம். ஆனால் ஆண்டாள் வியாழம் உறங்கிற்று என்றும் பாடுகிறார். அறிஞர், கணித வல்லுனர் லூயிஸ் டொமினிக் சுவாமிக்கண்ணுப் பிள்ளை வெள்ளி எழுச்சியும் வியாழன் அஸ்தமனமும் ஒரே சமயத்தில் எட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த நாள் டிசம்பர் 18, 731 என்று சொல்கிறார். பாண்டியன் கோச்சடையன் காலத்திற் தொடங்கி சீமாறன் சீவல்லபன் என்று அழைக்கப்படும் பாண்டியன் நெடுஞ்சடையன் காலத்தில் (எட்டாம் நூற்றாண்டு) பெரியாழ்வார் வாழ்ந்தார் என்று அறிஞர் மு ராகவய்யங்கார் ‘ஆழ்வார்கள் காலநிலை’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஆண்டாள் காலநிலையை இப்பாடலில் வரும் வரியான ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்ற வரியின் மூலம் கணக்கிடுகிறார்.எனவே ஆண்டாள் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும்’ என்று மு ராகவய்யங்கார் கணக்கிடுகிறார்.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1682 A -- - - புவி முன், சனி முன் (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1682 B - Prevent and change confusion (6)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1682 - C (Answers in English) பணக்கார கதை ஏன் மாறியது? (7)
Pictorial Puzzle குறிப்பு - 1682 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage