11-05-2020-ல் தொடங்கி 1000 பதிவுகள், 3200க்கும் மேற்பட்ட புதிர்கள் - மன நிறைவாக உள்ளது. பத்ரிநாத் சென்றபோது ஒரு நாள், வெப்சைட் வேலை செய்யாததால் ஒரு நாள் தவிர மற்ற எல்லா நாட்களும் வெளியிட்டது நீங்கள் தந்த ஆதரவால் மட்டுமே . நன்றி உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இந்த நன்னாளில் என் முதல் தமிழ்ப் புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.முதல் பதிப்பாளர் ஏமாற்றி விட்டதால் இப்புத்தகம் வெளிவரத் தாமதம் ஆகி விட்டது. சதுரம் மதுரம் என்ற பெயரை மாற்றி பதிப்பாளர் திரு மகாதேவன் உதவியுடன் வெளியிடுகின்றேன். இப்புத்தகம் உருவானதில் பெரும்பங்கு வகித்த திரு குணா அவர்களுக்கு நன்றி.
பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் நாளை வெளியிடப்படும்.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - விடைகள் 1000 A -- a. மாலையுடன் கயிறு நடுவில் எண் (4) b. புதிதானவர் பாதி, எங்கள் பாதி மர்மமானவை (5) c. திட்டமிட்டபடி நிறுவிய பாதிப்பாதி அத்தனையும் சமை (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடைகள் 1000 - B a. Rare to see that gentleman confused with flower inside (4) b. Varanasi turns with bell for a jewel (4)
ஆயிரம் என்றவுடன் என் வயதினருக்கு மனதில் தோன்றுவது 1947ல் வெளியான ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி எனும் திரைப்படம்தான். இன்றைய குறிப்புகள் அதை மனதில் வைத்துதான் அமைத்தேன். தற்புகழ்ச்சியாகத் தோன்றினாலும் குறிப்புகள் நன்றாக அமைந்ததால் வெளியிட்டேன். ஆர் சந்தானம்,Hemalatha, ஸௌதாமினி, அம்ருதா , ஆர்.நாராயணன் ஆகியோர் பாராட்டுக்கு நன்றி. புத்தகம் வெளியானதை பாராட்டிய நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் அவர்களுக்கும் நன்றி. முதல் இரண்டு பிரதிகளை வாங்கிய ஸௌதாமினி, K.Latha அவர்களுக்கும் நன்றி.
Pictorial Puzzle குறிப்பு - 1000 C - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four, five, six or seven *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)