பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 887 --விடைகள் வசிக்குமிடம் காடு குறைந்தால் பல்லி, பாம்பு (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 887 - He'll give tree with sky (4)>
Pictorial Puzzle குறிப்பு - 887 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
முத்துசுப்ரமண்யம் had commented (தஞ்சாவூரில்; மதுரையில் பொருள் வேறு). So I searched and found this interesting write-up by ராஜமாணிக்கம் .ரா
கோளாறு: "கோள்கள் வழி" என்று பொருள்; இந்தச் சொல் தஞ்சை வட்டாரங்களில் ஒரு பொருளும், மதுரைக்கு பக்கங்களில் நேர் எதிர் மறைப் பொருளிலும் பயன் படுத்தப் படுகிறது. தஞ்சசைப்பக்கம் "கோளாறு ஆகிவிட்டது" என்று சொன்னால் "எதிர் பாராத தவறு நேர்ந்து விட்டது" என்பது போன்று பொருள்; அதுவே மதுரைப் பக்கம் "இதைச் செய்ய ஒரு கோளாறு இருக்கிறது" என்று செய்யும் திறமையைக் குறிப்பிடுவர்.
‘கோளாறு’ என்று ஒரு தமிழ்ச்சொல். ‘என்னப்பா கோளாறாப் பேசுற?’ ‘பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு; காரியந்தான் ரொம்பக் கோளாறா இருக்கு!’ ‘கோளாறு புடிச்ச ஆளா இருப்பான் போலருக்கு!’ என்று கோளாற்றுக்குப் பயன்பாட்டுச் சான்றுகள் காட்டலாம். செரிமானக் கோளாறு, தொழில்நுட்பக் கோளாறு போன்ற பயன்பாடுகளும் உண்டு.
தீர்வில்லாமல் இழுத்துக்கொண்டே போகிற சிக்கலைத் தீர்ப்பதற்கு நுட்பமான யோசனை சொல்கிறவரை மதுரை வட்டாரத்தில் ‘கோளாறு சொல்கிறவர்’ என்பார்கள். ‘ஏப்பா, இதுக்கு நான் ஒரு கோளாறு சொல்றேன்; கேக்குறியா?’
கோளாறு ‘சீர்குலைவு’ என்றும், கோளாறு சொல்லுதல் ‘சீர்குலைவைச் சமன் செய்வதற்கான யோசனை’ என்றும் விளங்கிக்கொள்ளப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் கோளாறு என்கிற சொல் இன்னாளில் அடைந்திருக்கிற பொருள் வழக்குகள். முன்னாளில் கோளாறும் கோளாறு சொல்லுதலும் வேறு பொருள் வழக்குடையவை.
கோளாறு என்பது கோள்+ஆறு. கோள் என்பது ஒன்பது கோள்கள்; ஆறு என்பது வழி. கோள்களின் இயக்கமே கோளாறு. கோளாற்றை வடமொழியில் சொல்ல விரும்பினால் அது ‘கிரகச்சாரம்’. தமிழையும் வடமொழியையும் கலந்து மணிப்பிரவாளம் ஆக்கிக் ‘கோட்சாரம்’ செய்து அதைக் ‘கோச்சாரம்’ என்று வழங்குவர் சோசியர்.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் (0.24 min) & K.Latha (0.47 min) take the first two places as the fastest solvers today. The next three fastest solvers today are K.Natarajan - 1.16 min, சிவக்குமார் - 1.37 min, ஆர்.நாராயணன் - 1.42 min