|
பல ஆண்டுகளாக ஆங்கிலக் குறுக்கெழுத்துக்களின் விடை கண்டுபிடித்து வரும் நானும் என் மனைவி அம்ருதாவும் கலிஃபோர்னியாவில் ஜனவரி 2009ல் ‘தென்றல் குறுக்கெழுத்துப் புதிர் பார்த்தவுடன் அதன் தீவிர இரசிகர்களானோம். 2009 முதல் 2016 வரை நாங்களும் அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) புதிர்களை ஒவ்வொரு மாதமும் இணைய தளத்தில் அமைத்தோம்.
மே 11, 2020 முதல் ஒவ்வொரு தினமும் காலை ஏழு மணிக்கு பா பு (பார்த்தசாரதியின் புதிர்கள்) வெளியிடுகின்றேன். தினமும் மூன்று குறிப்புகளுடன் தொடங்கிய புதிர் 01-09-2023 முதல் நான்கு குறிப்புகளுடன் வெளிவருகிறது- 1. தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு, 2. EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு, 3. தமிழ் குறிப்புகள் - English Answers குறுக்கெழுத்து குறிப்பு 4. Pictorial Puzzle.
விடைகள் இரவு 7.00 மணிக்கு. நினைவில் கொள்ளுங்கள் 7.00 மணி காலையிலும் மாலையிலும்.
|