சிறுவர் விளையாட்டு பாடல்கள் சில.

 



சின்ன சின்னக் கல்லு பொறுக்கி
சிங்காரமா பாலங் கட்டி
பாலத்து மேல ஏறிக்கிட்டு
பபூன் வேஷம் போட்டுகிட்டு
தில்லாலங்கடி தில்லாலே
எனக்கு மீசை நல்லால்லே !


எங்க வீட்டு நாய்
எலும்பு திங்கப் போச்சு
கல்லால அடிபட்டு
காலு ஒடிஞ்சு போச்சு


அடடா அடடா அண்ணாமலை
அண்ணாந்து பாத்தா ஒண்ணுமில்லே
போகப் போக ஜவுளிக்கடை
போயிப் பாத்தா இட்லிக்கடை
இட்லிக்கும் சட்னிக்கும் சண்டை வந்ததாம்
ஈரோட்டு மாமனுக்கு தொந்தி வந்ததாம்


எங்கப்பா உங்கப்பா – தகர டப்பா
எங்கம்மா உங்கம்மா – மனோரம்மா
எங்கண்ணன் உங்கண்ணன் – வெளக்கெண்ணே
எங்கண்ணி உங்கண்ணி – தேங்காத்தண்ணி
எங்க பாட்டி உங்க பாட்டி – தலையாட்டி
எங்க தாத்தா உங்க தாத்தா – வெண்ணெய்த் தாத்தா
எங்க் தம்பி உங்க தம்பி – கரண்டு கம்பி
எங்கக்கா உங்கக்கா – வெண்டக்கா


டாம் டூம் பருப்பு
தவலையில வேகுது..
மைசூர் அப்பளம்
பெங்களூர் பாயாசம்
சம்பந்தியக் கூப்பிடுங்க.
சாப்பாடு போடுங்க
வெத்தல பாக்கு வையுங்க.
வெளியே புடிச்சுத் தள்ளுங்க !

விழியன் பக்கம் ஆசிரியர் விழியன் என்கிற திரு உமாநாத். (Click for blog)


(நன்றி – பெருந்துறை வட்டம் சிறுவர் விளையாட்டு பாடல்கள் ஆய்வு – உஷாராணி – பெரியார் பல்கலைக்கழகம்)


BACK to the Main Page